

கிரிக்கெட் உலகக் கோப்பையில், இலங்கை அணி சாம்பியன் பட்டம் பெற்றால் 1 மில்லியன் டாலர்கள் பரிசு என்று இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
பொதுவாகவே, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் அரசும், ரசிகர்களும் கிரிக்கெட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இதனால், கால்பந்து, ஹாக்கி போன்ற பிற விளையாட்டு வீரர்கள் மனதளவில் சோர்ந்துவிடுகிறார்கள். எனவே, கிரிக்கெட் போட்டிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுகளுக்கும் தர வேண்டும். அதை அரசுதான் முன்னெடுக்க வேண்டும்.
- எம். ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.