

'வீடில்லாப் புத்தகங்கள்' (கற்றலின் இனிமை) பகுதி மாணவர்கள் எல்லாக் காலங்களிலும் அவர்களுக்கே உரித்தான குறும்புத்தனத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் விழி திறந்து வழி நடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய இருவருக்குமே உண்டு என்பதைச் சொல்வதாக அமைந் துள்ளது கட்டுரை.
மேலும், குழந்தைகள் பெற்றோரைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என்பதையும், குழந்தை யாகவே இருந்தாலும் அதிகாரத்தால் அச்சுறுத்தப் படுவதை விரும்ப மாட்டார்கள் என்பதையும் தெளிவு படுத்தியது.
படிப்போடு வாழ்க்கைக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள், அடிப்படைத் தேவைகளைக் கற்றுக்கொள்வது போன்ற விஷயங்கள்தான் கல்வியை யும் முழுமையாக்கி ஒரு மாணவனையும் முழுமையாக் கும் என்ற மகரன்கோவின் கருத்து இக்காலத்துக்கு மட்டுமன்று; எக்காலத்துக்கும் பொருந்துகின்ற ஒன்று.
- ஜே. லூர்து, மதுரை.