

ராமகிருஷ்ணன் எழுத்தாளராக மட்டுமில்லாமல், சமூக அக்கறையாளராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் வெற்றி பெற்றுள்ளார் (வீடில்லாப் புத்தகங்கள்).
மேனகா காந்தியின் ‘பிரம்மாஸ் ஹேர்’ என்ற நூலைப் பற்றி மட்டும் எழுதிவிட்டுச் சென்றிருக்க முடியும். ஆனால், கட்டுரையில் இன்றைய சிறுவர்கள் மரத்தைப் பற்றி என்ன அறிந்து வைத்துள்ளார்கள் என்று, ஒரு சம்பவம் மூலம் விளக்கியுள்ளார். மரங்களைப் பற்றித் தெரியாமலேயே ஒரு தலைமுறையை மரம்நடு விழாவுக்கும், மரத்தை வளர்த்துப் பேணவும் ஏற்பாடு செய்வது விசித்திரமாக உள்ளது.
புகழ் வெளிச்சத்தைத் தேடாது, அமைதியாக சமூகத் தொண்டாற்றிவரும் நெசவுத் தொழில் செய்யும் ஈரோடு நாகராஜன், வேட்டுவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் அய்யாசாமி போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மரம் வைப்பவருக்குக் கூலி கிடையாது. ஆனால், அதை வெட்டுபவருக்கும் விற்பவருக்கும் மட்டுமே பணம் கிடைக்கிறது - எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.