பரவசம்

பரவசம்
Updated on
1 min read

‘கானகத்தின் குரல்' நேர்காணல் பரவசத்தைத் தந்தது. போர்னியோ காட்டுக்குள் நுழைந்து, சிற்றுயிர்களின் ரீங்காரத்தையும் தாவரங்களின் ஓசையையும் சலசலக்கும் நீரோடைகளையும் தரிசித்து, கால் தடங்களைக் கொண்டே எந்த வகையான விலங்குகள் அந்தப் பாதையில் சென்றிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததுகுறித்த விவரணை அற்புதம்.

மேலும், மூதாய் மரம் வெட்டப்படும்போது அதற்கான இறுதிச்சடங்கில் ஓர் உறவினராய்ப் பங்கேற்றதும், திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிட்டுள்ள ‘ஆனைச் சாத்தன்' என்ற பறவை நம்ம கரிச்சான் பறவைதான் என பெரியவர் ஒருவர் மூலமாகக் கேட்டுணர்ந்தது இன்னும் பரவசம்!

- ஜே. லூர்து,மதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in