கண்ணீருடன் மக்கள்

கண்ணீருடன் மக்கள்
Updated on
1 min read

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மக்களுக்காகச் செயல்படும் அரசானது கல்வி - சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் பொறுப்பைத் தம் கையில் வைத்திருப்பதோடு, அதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து லஞ்ச லாவண்யங்களை முழுமையாகத் தவிர்த்துச் செயல்பட வேண்டும்.

அது இங்கே நடக்காத சூழலில்தான், தம் வாழ்நாள் உழைப்பு மூலம் கிடைத்த சேமிப்பின் பெரும் பகுதியைத் தனியார் மருத்துவமனைகளின் மேஜைகளில் கண்ணீருடன் கொண்டுபோய்க் கொட்டுகிறார்கள் இந்திய மக்கள்.

மக்களுக்கு அத்தியாவசியமான கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் ஆட்சியாளர்கள் சிறப்புக் கவனத்தைச் செலுத்தி மக்களுக்காகச் செயல்பட வேண்டும்.

- சி. விஜய் ஆனந்த்,போத்தனூர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in