

‘தி இந்து'வில் வெளியாகும் தலையங்கம் ஒவ்வொன்றுமே நம் நாட்டின் பாரம்பரியச் சின்னமாகிவிட்ட அறத்தையும், அறம் சார்ந்த பண்புகளையும் மீட்டெடுப்பதாகவே உள்ளது.
கரூர் மாணவனைக் குற்றவாளியாக்கிய விஷயத்தில் ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய விதமும் சரி, திருநங்கையரை ஆடவைத்து வரி வசூலித்ததில் நகராட்சியைக் கண்டித்த விதத்திலும் சரி, இரண்டிலும் சமூக அக்கறை தெரிகிறது.
ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் சமூக நலப் பண்புகளை இது போன்ற தலையங்கங்கள்தான் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதியவைக்கப் பெரிதும் உதவும்.
- ஜே. லூர்து,மதுரை.