

‘தமிழர்களுக்குத் தமிழ்நாட்டில் வேலை இல்லையா?’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை படித்தேன். தமிழகத்தில் செயல்படும் மத்திய நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாம் போராடுகிற அதே நேரத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயம் ஆக்கப்படுவதை எதிர்த்தும் மத்திய அரசின் வேலைவாய்ப்புத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் போராட வேண்டும்.
அதற்கு அனைத்து தேசிய இன உழைப்பாளி மக்களையும் ஒன்றிணைத்துப் போராடுவதுதான் சரியான வழிமுறையாக இருக்க முடியும். ஏனென்றால், மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்திவரும் உலகமயக் கொள்கையால் அனைத்துத் தேசிய இன மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
- மா. சேரலாதன்,தர்மபுரி.