

‘கல்வி முறை செல்ல வேண்டிய திசை எது?' தலையங்கம் அருமை. கல்வி என்பது அறிவைப் பெருக்கும் முயற்சி என்பது போய், பணம் சம்பாதிக்கவே என்ற நிலைக்கு மாறியதன் விளைவே மதிப்பெண்ணை மையமாகக் கொண்ட கல்வி.
அதே சமயம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பலருக்குப் போதுமான கல்வி வசதி கிடைப்பதில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி கிடைக்க தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும்.
மதிப்பெண்ணுக்காகப் படிப்பதைவிட, பல கலைகளைக் கற்கவும் உலகைத் தெரிந்துகொள்ளவும் உதவும் கல்வியே வாழ்க்கைக்கு உதவும் என்ற தலையங்கக் கருத்து மிகவும் முக்கியமானது.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.