

‘பெண் இன்று’ பகுதியில் ‘கலையால் பேசும் திருநங்கைகள்’ படித்தபோது மனதுக்குப் பெருமையாக இருந்தது. எந்தக் கலையும் பொதுவானது.
அது தன்னைத் தேடி வருவோரை நாடி ஆதரிக்கும் என்பது உண்மை என்று திருநங்கைகளின் ‘பாரம்பரியக் கலை நிகழ்வுகளைப் படித்துப் புரிந்துகொண்டோம். அவர்களின் கலை உணர்வைச் சமுதாயமும் ஆதரித்தது. மக்கள் அந்த நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்த்ததிலிருந்தே நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மக்களால் சூழ்ந்த சமுதாயத்தை இணைக்கும் இது போன்ற செய்திகளைப் படத்துடன் வெளியிட்டு, திருநங்கைகளை சமுதாயத்துடன் இணைக்கும் பாலமாகச் செயல்படும் ‘தி இந்து’வுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
- உஷாமுத்துராமன்,திருநகர்.