

‘வெற்றிக் கொடி’யில், சாதனை புரிந்த திருநங்கை ஷீத்தல் நாயக் பற்றிய செய்தி அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருந்தது. வலியைப் பொறுத்துக்கொண்டு வாழ்க்கையைச் சவாலாக சேவை செய்து சாதனை செய்திருக்கிறார் ஷீத்தல் நாயக். வாழ்த்துகள் ஷீத்தல்!
- உஷாமுத்துராமன்,திருநகர்.
ரயிலில் ஆடிப்பாடிப் பிழைத்த திருநங்கை மது நரேஷ் கின்னர் சத்தீஸ்கர் நகர மேயராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. உத்தரப் பிரதேச மாநில அரசியலில் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற தகவல் கவனிக்க வேண்டியது. தமிழகத்திலும் அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தளங்களிலும் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சந்திக்கும் துயரங்கள் நீங்கும்.
- தஞ்சை பிரவீண்,மின்னஞ்சல் வழியாக…