

‘இசைக்கு எதிரானதா இஸ்லாம்’ என்ற கட்டுரையின் மூலம் ஒரு மிகவும் நுட்பமான மதம் சார்ந்த விஷயத்தை சர்க்கஸ் கம்பியில் நிற்பதுபோல் நின்று கொண்டு மிகவும் அழகாக அலசி ஆராய்ந்திருக்கிறார் களந்தை பீர்முகம்மது.
மானுடத்துக்குக் கிடைத்திருக்கும் சிறந்த அருட்கொடை இசை. மயக்கும் தன்மை கொண்டதால் இசை மனிதனின் வழியை மாற்றும் என்று சில பழமைவாதிகள் சொல்வதைப் புறம்தள்ள வேண்டும். சவூதி அரேபியாவில் அரசு விழாக்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதையும் அரேபிய இசை உலகப் புகழ் பெற்றது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
திருக்குர்ஆனை ஏற்ற இறக்கங்களுடன் முறையாக ஓதினால் அதுவே மக்கள் மனதை ஈர்க்கும் இசைபோல் இருக்கும். இசை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான சொத்து!
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி-7