

திருச்செந்தூர் கோயிலில் வரும் பக்தர்களின் நெரிசலைப் பயன்படுத்தி, பிஞ்சுக் குழந்தைகளைக் கடத்திப் பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கில் சமூக நல அமைப்புகள் தங்களை இணைத்துக்கொண்டு, இம்மாதிரி படு பாதகச் செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாவண்ணம் செயலாற்ற வேண்டும். அதேசமயம், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குக் குடும்பத்துடன் செல்பவர்கள், மிகுந்த எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
- அ.பட்டவராயன்,திருச்செந்தூர்.