

‘இணையற்ற எரிபொருள் வளம் மீத்தேன் வாயு: நாட்டின் வளர்ச்சியா? வாழ்வாதாரமா?’ என்று ஆராயப்படுவது வேறு கதை. இங்கு அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் கூறுவது போன்ற கட்டுமான அமைப்புகள், மேலை நாடுகளில் வேண்டுமானால் சாத்தியப்படலாம்.
ஏனென்றால், யாரேனும் ஒருவர், அங்கே ஆதாரபூர்வமாகக் குறை சொல்லிவிட்டால்கூட மொத்தத் திட்டத்தையும் ரத்துசெய்யும் துணிவு அந்த நாடுகளுக்கெல்லாம் உள்ளது. ஆனால், இங்கு சொல்லவும் வேண்டுமா? இந்தியாவில், எதுவுமே கொள்ளிக்கட்டை வைத்துத் தலை சொறிவது போலத்தான்.
நீங்கள் சொல்வதுபோல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுதான் கிணறுகளைக் கட்டினார்களா, பாதுகாப்புடன்தான் மீத்தேன் உற்பத்தி செய்கின்றனரா என்று ஒழுங்காக ஆராய முறையான எந்த அமைப்பும் இங்கே இல்லை. இதனால், நாம் அடையப்போகும் பலன், வளர்ச்சியும் அல்ல வாழ்வாதாரமும் அல்ல விபரீதம் மட்டுமே!
- ஸ்ரீராம், ‘தி இந்து’ இணையதளத்தில்...