

வறுமை ஒருவரை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கும், எப்படியெல்லாம் மனதைப் பக்குவப்படுத்தும் என்பதற்கு, புதுச்சேரி கடற்கரையில் சுண்டல் விற்கும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பழனிராஜ் மிகச் சிறந்த உதாரணம்.
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்று ஏக்கத்தோடு இருக்கும் இளைஞர்கள் மத்தியில், தனது மேற்படிப்பையும் தொடர்ந்துகொண்டு, வீட்டின் சூழ்நிலை காரணமாக, பொருளாதாரப் பாரத்தையும் தனது தோள்களில் சுமந்துகொண்டு இருக்கும், பொறுப்புள்ள இந்த இளைஞர் பாராட்டுக்குரியவர்.
- பி. நடராஜன்,மேட்டூர்அணை.