

எஸ்.வி. வேணுகோபால் புத்தகத் திருவிழா பற்றி எழுதியவை ஆர்வமூட்டுபவை. வாசிப்பு என்பது எத்தனை இன்பம் என புத்தகப் பிரியர்கள் அறிவர்.
சென்னை புத்தகத் திருவிழாவுக்குத் தொடர்ந்து சில ஆண்டுகளாகச் செல்கிறேன். வேலூரிலிருந்து புறப்படும்போதே மனம் பரபரப்படையும். இத்தனை அரங்குகளையும் புத்தகங்களையும் ஒன்றாகப் பார்ப்பதே நல்ல அனுபவம். நிறைய இளைஞர்கள் புத்தகங்களைத் தேடியது மனதுக்குப் பெரிய மகிழ்வை அளித்தது. இந்த ஆண்டு ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. எத்தனை எத்தனை புத்தகங்கள்!
எத்தனை எத்தனை அரங்குகள். நம் சமூகத்தில் இன்னும் ஆர்வமூட்டப்பட்டு, விளம்பரப்படுத்தப்பட்டு புத்தக விழாக்கள் எல்லாப் பகுதிகளிலும் நடைபெற வேண்டும். மக்களின் வாங்கும் திறன் இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆடைகளுக்கும் ஆபரணங்களுக்கும் உணவுக் கடை களுக்கும் பொருட்களுக்கும் பல ஆயிரங்களைச் சாதாரணமாகச் செலவழிக்கும் மக்கள், அறிவுபூர்வமான புத்தகங்களுக்கும் செலவிட வேண்டும். அது செலவல்ல: சேமிப்பு!
- மோனிகா மாறன்,வேலூர்.