

வீணாகப் போகும் உணவுகுறித்த அக்கறை நம்மிடம் குறைவு. நாம் சாப்பிடாமல் குப்பையில் வீசும் உணவுகள், எங்கோ இருக்கும் ஏழையின் பசியைப் போக்கும் என்பதைப் பெரும்பாலானோர் உணர்வதில்லை. இப்படியான சூழலில், வீணாகும் உணவுப் பொருட்களை ஏழை மக்களுக்கு விநியோகிப்பதற்கு ஏற்றவாறு இணையதளத்தை உருவாக்கிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் ரஜாவத் பாராட்டப்பட வேண்டியவர்.
- பி. நடராஜன்,மேட்டூர்அணை.