இன்னொரு தடவை....

இன்னொரு தடவை....
Updated on
1 min read

இன்றைய அரசியலில், யார் எந்தப் பக்கம் கொள்கைப் பிடிப்போடு இருப்பார், யாரெல்லாம் சுயநலத்துக்காகக் கட்சி தாவுவார் என்பதைச் சாமான்ய மக்களால் கணிக்கவே முடிவதில்லை.

சுருங்கச் சொன்னால், எளிதில் எதையும் மறந்துவிடும் முட்டாளாகவே மக்களை நினைக்கிறார்கள், இன்றைய சுயநலமிக்க அரசியல்வாதிகள். சந்தர்ப்பவாத அரசியலைப் பயன்படுத்திக்கொண்டு, தனது சுயலாபத்துக்காக, பாஜகவில் கிரண் பேடி சேர்ந்துவிட்டாலும், அவருக்கு அண்ணா ஹசாரேவின் ஆசி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கேஜ்ரிவால் வெற்றிபெற்றுவிடுவாரோ என்ற பயம் பாஜகவுக்கு இருக்கிறது என்பது கிரண்பேடியை அவருக்கு எதிராகக் களம் இறக்கியதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

ஆம் ஆத்மி (பாமர மனிதன்) என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த கேஜ்ரிவால், நேர்மையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்பது மட்டுமல்ல, குறுகிய காலத்தில் டெல்லி மக்களின் மனதில் இடம்பிடித்தவர். ‘மக்களுடன் ஒன்றாகக் கலந்து, டெல்லியை ஆட்சி செய்வதையே விரும்புகிறேன்' என்ற கேஜ்ரிவால் கூறிய வரிகளை, டெல்லி மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

ஒரு தடவை செய்த தவறை நன்கு உணர்ந்த கேஜ்ரிவாலுக்கு, டெல்லி மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அதனைச் சரியாகப் பயன்படுத்தி, ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படையான நல்லாட்சி தருவார் என்பது திண்ணம்.

பி. நடராஜன்,மேட்டூர் அணை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in