

பிஹார் கலவரத்தில் முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்றிய இந்துப் பெண்குறித்த செய்தி, இன்றைய காலகட்டத்தில் மிகவும் நம்பிக்கை தருகிறது.
சாதி, மதம் பார்க்காமல் சக மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதைவிட உயர்ந்த செயல் வேறில்லை. இந்தச் சம்பவத்தில் தனது வீட்டைச் சோதனையிட முயன்ற கலவரக்காரர்களிடம் பொய் சொல்லி 9 முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்றிய அந்தப் பெண்மணி பாராட்டுக்குரியவர்.
எந்தச் சம்பவம் நடந்தாலும், அதைக் கலவரமாக மாற்றி சக மனிதர்களின் உயிரைக் கொல்ல முயல்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
- ராஜ்குமார் விஜயன்,சேலம்.