

மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்த போகோ ஹராம் அமைப்பினரிடம் தன் மகளையே விற்ற நைஜீரியர் பற்றிய செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குழந்தைகள் கேரளத்தில் விற்கப்பட்ட செய்தி, வேதனையை அதிகமாக்கியது.
தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளை வளர்க்க வழியில்லாமலா போய்விடும். இன்று நல்ல நிலையில் இருக்கும் பலரிடம் கேட்டுப் பார்த்தால், அவர்களது குடும்பத்தினர் பல்வேறு கஷ்டங்களுக்கு இடையில் தங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்கவைத்து ஆளாக்கியிருப்பது தெரியும். வறுமையைக் காரணம் காட்டி, குழந்தைகளை விற்பதைவிடக் கொடுமை வேறு எதுவும் இல்லை.
- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.