

குழந்தைகளின் நலனில், அறிவு வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை கே.என். ராமசந்திரன் எழுதிய ‘குழந்தைகளைத் தாராளமாகப் பாராட்டுங்கள்’ கட்டுரை. குழந்தைகள் நிச்சயம் பாராட்டை எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
- க. அன்பரசு,மின்னஞ்சல் வழியாக…
***
‘குழந்தைகளுக்கு அன்பைக் கொடுங்கள் (அன்பை மட்டும் கொடுங்கள்)’ எனும் கலீல் ஜிப்ரானின் கருத்துக்கு வலு சேர்க்கும் அருமையான பதிவுதான் கே.என். ராமசந்திரனின் கட்டுரை. பிறக்கப்போகும் பிள்ளைகளைத் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அனுப்புவதற்காகத் தங்கள் மூளையைத் தயார்செய்யும் இளைஞர்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற கருத்துகள்!
- சு. ராமசுப்பிரமணியன்,தோவாளை.