

தமிழக விளையாட்டுத் துறையின் அலட்சியத்தால், அசாமில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தமிழக மாணவர்கள் இழந்துநிற்பது வருத்தம் தருகிறது.
ரயில் பயணச்சீட்டு உறுதியாகாத ஒரே காரணத்தால், போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள் மாணவர்கள். இந்த விஷயத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மவுனம் சாதிப்பது அவர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது.
- கி. ரெங்கராஜன்,சென்னை.