

அற்புதமான ஒரு படைப்பாளிக்கு அஞ்சலியைச் செய்திருக்கிறது ‘தி இந்து’. ஆர்.கே. லக்ஷ்மண், தூரிகையின் வழி மவுனமாகக் கலகம் நிகழ்த்திக்கொண்டிருந்த போராளி என்றே சொல்ல வேண்டும்.
பல நூறு கேலிச்சித்திரக்காரர்கள் அவரை மானசீகக் குருவாகக்கொண்டிருக்கும் ஏகலைவன்களாகப் பல தலைமுறை களாக வந்து கொண்டிருக்கவே செய்கின்றனர். அவரது உருவாக்கமான ‘திருவாளர் பொதுஜனம்’, அதிர்ந்து பேசாது காட்டிய உடல் மொழிகள் ஒவ்வொன்றும் அப்பட்டமான சமூக விமர்சனம்.
- எஸ்.வி. வேணுகோபாலன்,சென்னை.