

‘உயிர் மூச்சு’ பகுதியில் ஆதி வள்ளியப்பன் எழுதிய ‘2014: தமிழகம் கண்ட சுற்றுச் சூழல் சர்ச்சைகள்’ கட்டுரை மிக முக்கியமானது. தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கும் முக்கியமான 10 பிரச்சினைகளை எடுத்து அலசிய விதம் வாசகர்களிடையே புதிய பார்வையை ஏற்படுத்தும். மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் திட்டம், செய்யூர் அனல்மின் நிலையத் திட்டம் என பல ஆபத்தான திட்டங்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டங்கள் மக்கள் சக்தியின் பலத்தை உணர்த்தின.
மரபணு மாற்றப் பயிர்கள் விஷயத்தில் மத்திய அரசின் சாயம் வெளுத்ததை வெட்ட வெளிச்சமாக்கி, இன்றைய அரசியலைப் புரியவைத்த கட்டுரையாளருக்கு நன்றி.
-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.