

‘லஸ்ஸி, ஐஸ்க்ரீம் அல்லது பலூடா’ என்ற கட்டுரை, புத்தகங்கள் மீது ஒருவர் எந்த அளவுக்குக் காதல் கொள்ள முடியும், வாசிப்பை ஒருவர் எந்த அளவுக்கு நேசிக்க முடியும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
நானும் ஒரு புத்தக ஆர்வலன். புத்தகக் காதலன். கிட்டத்தட்ட 1,000 புத்தகங்களுக்கு மேல் எனது சேமிப்பில் உண்டு. எனது பள்ளி நாட்களிலிருந்தே நான் சேமித்துவருகிறேன். திருமணமாகி 30 ஆண்டுகள் கழிந்த பின்பும்கூட அந்த நல்ல பழக்கத்திலிருந்து விடுபடவில்லை.
வீட்டின் பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்கும் அறையில் எனது அந்த செல்வங்களை அடுக்கிவைத்திருக்கிறேன். வேறு வழியில்லை. ‘‘இவ்வளவு புத்தகங் களும் எதற்கு?” என்று மனைவி அலுத்துக்கொள்கிறாள். “நான் வாழும் வரையிலும் அவையும் என்னுடன் வாழும்...” என்று பதில் சொல்லியிருக்கிறேன். ‘‘சிந்திப்பதால் வாழ்கிறேன்’’ என்று சொன்னான் ஓர் அறிஞன். ‘‘வாசிப்பதால் நான் வாழ்கிறேன்’’.
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.