

தமிழ்ச் சூழலில் வாழும் சௌராஷ்டிர மக்களின் வாழ்வியலை அழகாகப் பதிவுசெய்தவர் என்ற பெருமை எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமுக்கு உண்டு. ‘மணிக்கொடி’ இதழ் நின்றுபோன பின், அதில் எழுதிய எழுத்தாளர்களுக்காக 1948-ல் ‘தேனீ’ எனும் இதழை எம்.வி. வெங்கட்ராம் தொடங்கினார்.
அவர் ஆசிரியராகவும், கரிச்சான்குஞ்சு துணை ஆசிரியராகவும் பொறுப்பேற்று அந்த இதழை நடத்தினார்கள். இலக்கியத்தைவிட நட்புக்கு அவர் அதிக முக்கியத்துவம் தந்ததால் எதிர்கருத்தியல் கொண்ட எழுத்தாளர்கள், விமர்சகர்களோடும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது.
கலை இலக்கியம் பகுதியில் அவரைப் பற்றிய சிறப்பான கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி.
- சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.