30 ஆயிரம் போலி மருத்துவர்கள்!

30 ஆயிரம் போலி மருத்துவர்கள்!
Updated on
1 min read

எந்த விஷயமாக இருந்தாலும் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லையென்றால் போலிகள் உருவாகிவிடுவது இயற்கையே. எனவே, கூடுதலாக அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும்.

மேலும், கிராமப்புறத்தில் இருக்கும் மக்களுக்குத் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மருத்துவர்களும் மற்ற பணியாளர்களும் அருகில் உள்ள பெருநகரங்களில் குடியிருந்துகொண்டு பணி நேரத்தில் மட்டும் கிராமத்துக்குச் சென்று பணிபுரிந்துவரும் நிலை உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் மாற்றம் கொண்டுவந்தால், போலி மருத்துவர்களை ஒழித்துவிடலாம்.

- ஜேவி,சென்னை - 44.

***

முறையாக சித்தா மருத்துவம் படித்த மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. அதேபோல், மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் அன்பளிப்பு, சலுகைகளுக்காகத் தேவையற்ற மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யும் ஆங்கில மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மருத்துவத் துறையைப் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும். போலி மருத்துவர்கள் உருவாக இவையும் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

- மா. சேரலாதன்,தர்மபுரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in