நீமா அளித்த மன்னிப்பின் வலிமை

நீமா அளித்த மன்னிப்பின் வலிமை
Updated on
1 min read

‘பெண் இன்று’ பகுதியில், ‘நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு’ என்ற கட்டுரை படித்தேன். பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாய் ‘மன்னிப்பு’ என்ற துணிச்சலான முடிவை எடுத்துள்ளது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை அளித்தால் எல்லாம் சரியாகிவிடுமா?

வேறு ஒரு பெண் மீது வன்முறையை நிகழ்த்திக்கொண்டிருப்பான். இது அவர்களின் தவறல்ல. இந்த அமைப்பின் தவறு. அமைப்புதான் ஆணிவேர். எவ்வளவு சரியான வார்த்தைகள். ஒரு தவறுக்கு மற்றொரு தவறின் மூலம் தண்டனை கொடுத்துக்கொண்டே இருந்தால் அது தொடர்கதையாகத்தான் இருக்கும். முடிவு கிடைக்காது.

நீமா நமடாமு செய்தது ஒரு துணிச்சலான செயல். எந்த ஒரு தாயும் சாதரணமாகச் செய்ய மாட்டார். ஆனால், தண்டனையைவிட மன்னிப்புக்கு அதிக வலிமை இருக்கிறது என்ற காந்தியின் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு அவர் நடந்திருப்பது பெண்மைக்குப் பெருமை சேர்க்கக்கூடிய செயலாகக் கருகிறேன்.

நரகத்திலிருந்துதான் சொர்க்கத்தைக் கொண்டு வர முடியும். கல்வி மூலம்தான் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்று தெரிவித்திருப்பது சத்தியமான வார்த்தைகள். அவருடைய முயற்சி வெற்றி பெற வேண்டும். சமூக அமைப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

- ஜீவன்.பி.கே.,கும்பகோணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in