

‘மனிதாபிமான சிகிச்சைக்கு என்ன வழி?’ கட்டுரை, மருத்துவத் துறையின் எதிர்கால நிலைகுறித்த கவலையை வெளிப்படுத்தியது. ஆரம்ப நிலையில் இருக்கும் நோய்க்கான சிகிச்சைக்கு வழிவகுக்காமல், நோயின் முதிர்ச்சி நிலையில் மட்டும் சிகிச்சை அளிக்கும் போக்கு ஆபத்தானது.
மருத்துவத் துறையை இப்படிப் பணம் சாம்பாதிப்பதற்காக மாற்றியமைத்திருப்பது, மனிதர்களையே ஒரு வியாபாரப் பொருட்களாகப் பார்க்கும் அவல நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. நவீன மருத்துவம் நோயாளிகளை எளிதில் குணப்படுத்துவதற்கா?
தீவிர சிகிச்சைக்குக் கொண்டுசெல்வதற்கா? மனிதாபிமானம் மிக்க மூத்த மருத்துவர் பி.எம். ஹெக்டே கூறுவதை, எல்லா மருத்துவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில், மருத்துவத் துறையையே தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுசெல்ல வேண்டிவரும்!
- க. கமல்,உளுந்தூர்பேட்டை.