

‘வெற்றிக் கொடி’ பகுதியில் ‘பிடித்த வழியில் படிக்க லாமே?’ என்ற அறிவுத் திறன்பற்றிய ஆய்வு மிகவும் அருமை. தன்னிடம் இருக்கும் திறமையைத் தேர்வும் மதிப்பெண்களும் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
சூத்திரங்கள் போன்றவை அப்படியே எழுதப்பட்டால்தான் அதற்கும் மதிப்பெண் கிடைக்கும் என்பதால், அதை மரம்போல வரைந்து, கருத்துகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள சொல்லிக்கொடுத்தது அனைவருக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்கும். மீன், மரம் ஏற முயன்றால், தன் வாழ்நாள் முழுவதையும் இழந்துவிடும் என்ற அற்புதமான உதாரணத்தைச் சொன்னது வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. பாராட்டுகள்.
- உஷாமுத்துராமன், திருநகர்.