‘மாதொருபாகன்’ சர்ச்சையின் இன்னொரு கோணம்

‘மாதொருபாகன்’ சர்ச்சையின் இன்னொரு கோணம்
Updated on
1 min read

பெருமாள்முருகன் எழுதிய நாவலைக் கண்டித்து, நடத்தப்பட்ட கடையடைப்பு அவசியமற்றது. இதுபோன்ற கடையடைப்புப் போராட்டங்களால் பொருளாதார இழப்புதான் மிஞ்சும். ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு அமைப்பும் எதிர்க்க ஆரம்பித்தால் இலக்கியத்தில் என்னதான் மிஞ்சும்?

- ரவிக்குமார்,மின்னஞ்சல் வழியாக…

‘மாதொருபாகன்’ சர்ச்சையின் இன்னொரு கோணம்

எங்கள் ஊர் மக்களின் மனநிலையை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் எழுத்தாளர்களை மதிப்பவர்கள். பெருமாள்முருகனின் அனைத்துப் புத்தகங்களையும் எதிர்க்கவில்லை. ‘மாதொருபாகன்’ நாவலில் கோயில் திருவிழா பற்றியும், தேர்த் திருவிழா பற்றியும் அவரது தவறான கண்ணோட்டத்தையும் மாற்றக் கோரிதான் எங்கள் போராட்டம் நடைபெற்றது.

எங்களின் கோரிக்கை வெளிப்படையானது. மொத்தம் 44 அமைப்புகள் சேர்ந்தே இந்தப் போராட்டத்தைச் செய்கின்றன. காவல் துறைக்கு அளிக்கப்பட்ட அனைத்து மனுக்களிலும் குறிப்பிட்டிருக்கிறோம். ஆக, வெளிப்படையாகவே நாங்கள் செயல்படுகிறோம்.

- ‘திருச்செங்கோடு மானம் காப்போம்’ அமைப்பின் எதிர்வினை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in