

லிவிங் ஸ்மைல் வித்யாவின் கடிதம் படித்தேன். திரைப்படங்களில் திருநங்கைகளையும் மாற்றுத் திறனாளிகளையும் கேலி செய்து எடுக்கப்படும் காட்சிகள் தொடர்ச்சியாக வந்துகொண்டுதான் இருக்கின்றன.
பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளில் இவர்களை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருகிறார்கள். கமல், ரஜினி போன்ற ஸ்டார்களின் படங்களில்கூட இது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன என வித்யா குறிப்பிட்டிருப்பது வியப்பளிகிறது.
சமூகமும், அறிவியல் தொழில்நுட்பமும் பல்வேறு மாறுதலுக்கு உள்ளாகிவிட்ட இந்த நவீன காலகட்டத்தில், திருநங்கைகள் மட்டும் இன்னும் ஏளனமாக பார்க்கப்படுவது வேதனைக்குரியது. லிவிங் ஸ்மைல் வித்யாவின் கடிதம் இயக்குநர் ஷங்கருக்கு மட்டும் எழுதப்பட்ட கடிதம் அல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் எழுதப்பட்ட கடிதம்.
- ப. சுகுமார்,தூத்துக்குடி.