

பல சாதனைகளைப் படைத்த இந்திய அறிவியல் மேதை சுப்பா ராவ் பற்றிய கட்டுரை சிறப்பானது. அவருடைய வரலாற்றை படிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.
அவருடைய பெருந்தன்மையே அவருடைய புகழை மறைத்துவிட்டது. பட்டம், பதவி ஆகியவற்றை ‘வாங்க’ முயல்பவர்கள் அதிகரித்திருக்கும் இக்காலத்தில், சுப்பா ராவ் போன்ற மேதைகளுக்கு நாட்டின் உயரிய விருதுகளை வழங்கியிருக்க வேண்டும்.
மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கக் காரணமாக இருந்த இந்தியர் என்பதால் நம் நாட்டுக்கே அழியாத புகழைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் சுப்பா ராவ்.
- இக்ரா சபி,மின்னஞ்சல் வழியாக…