

கங்கையைச் சுத்தப்படுத்துவதுபற்றி மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விகள் நியாயமானவை. கங்கையைச் சுத்தம் செய்வதற்குமுன் அதை அசுத்தப் படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும்.
தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்திருக்கும் பிரதமர் மோடி, முதலில் கங்கையில் பிணங்களை வீசுவதையும், கங்கைக் கரையோரம் உள்ள ஆலைகளின் சுத்திகரிக் கப்படாத கழிவுகள் நதியில் கலக்கப்படுவதையும் தடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அதன் பின்னர், கங்கை தானாகவே சுத்தமாகிவிடும்.
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை-83.