

ந.முத்துசாமி எழுதி ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கிய ‘கட்டியக் காரன்’ நாடகம்பற்றிய பதிவு அருமை. நடிக்கவும், நாடகம்பற்றி எழுதினால் படிக்கவும் ரசிகர்கள் இன்றி நலிந்துபோய்க்கொண்டிருக்கின்றன நாடகங்கள். இந்நிலையில் ‘கட்டியக்காரன்’ போன்ற நாடகங்கள் நம்பிக்கை தருகின்றன. போலி முகங்களைப் போர்த்தித் திரியும் நவீன மனிதர்களுக்கு நிஜ முகமும் முதுகெலும்பும் அவசியமற்றவையாகப் போய்விட்டன.
- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.