

தொழுநோயாளிகள், வன நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடிகள், புறக்கணிக்கப்பட்ட ஏழைகள், கைவிடப்பட்டவர்கள் என்று சமூகம் கண்டுகொள்ளாத அல்லது வெறுத்து ஒதுக்கும் மக்களுக்குத் தொண்டுசெய்த பாபா ஆம்தே மகத்தான மனிதர். தொழுநோயாளியைக் கண்டு முதலில் அச்சம் அடைந்து அங்கிருந்து சென்றுவிட்ட பின்னர், கொட்டும் மழையில் அந்த மனிதர் என்ன செய்வார் என்று எண்ணிய பாபா ஆம்தே, இரக்கத்துடன் அவருக்கு உதவிசெய்திருக்கிறார். அவரைப் பற்றிய கட்டுரை பலருக்கு ஊக்கம் தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- தஞ்சை பிரவீண்,மின்னஞ்சல் வழியாக…