

முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் நல்ல தகவல்களைத் தாங்கி வந்துள்ளது ‘வணிக வீதி’. ‘ஈ-காமர்ஸ்’ பற்றிய தொடர் அருமை. இந்த இணைப்பில் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் பற்றி விரிவான அலசல்கள் வேண்டும். அதிகம் அறியப்படாத தொழில்துறைகள் பற்றி வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். வணிகம் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்கப்படுத்தவும் வந்திருக்கும் ‘வணிக வீதி’க்கு நல்வரவு.
- ரா.பொன்முத்தையா,தூத்துக்குடி.