

விகடன் குழுமத் தலைவர் எஸ்.எஸ். பாலனுக்கு ‘தி இந்து’ செலுத்தியிருக்கும் அஞ்சலி உன்னதமானது. அதிகார பீடத்தின் முன் அடிபணிய மறுக்கும் பத்திரிகையாளர்கள், தங்கள் வாசகர்களுக்கும் கம்பீரத்தைத் தருகிறார்கள். அந்த வகையில் வாசகர்களைச் சிறப்பித்தவர், எஸ்.எஸ். பாலன். எண்ணற்ற இளைஞர்களைப் பத்திரிகைத் துறை நோக்கி ஈர்த்த அவரது பாங்கு வியக்கவைக்கிறது. அவரது மறைவு, தமிழ் இதழியல் வரலாற்றுச் சங்கிலித் தொடரில் முக்கியமான கண்ணியின் பிரிவை உணர்த்துகிறது.
- எஸ்.வி. வேணுகோபாலன்,சென்னை.