

பஞ்சாப் மாநிலத்தில் இலவசக் கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் சிகிச்சை செய்துகொண்டவர்களில் 14 பேருக்கு பார்வை முற்றிலும் பறிபோயிருக்கிறது.
தருமபுரி, சேலம் மருத்துவமனைகளில் சமீபத்தில் பச்சிளம் குழந்தைகள் இறந்தன. சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை அறுவை சிகிச்சையில் 14 பெண்கள் இறந்தனர்.
இப்படியான சம்பவங்கள் கவலை தருகின்றன. குறைந்த செலவில் சிறப்பான சிகிச்சைகளுக்குப் பெயர்பெற்றது இந்தியா. ஓமன் போன்ற வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சிகிச்சைக்காக இங்கே வருகிறார்கள்.
இதுபோன்ற தவறான சிகிச்சைகளால் இந்தியாவின் பெயர் கெடுவது மட்டுமல்லாமல், சிகிச்சைக்காக வெளிநாட்டினர் வருவதும் குறையும் அபாயம் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் விழித்துக்கொள்ள வேண்டும்.
அ. ஜெயினுலாப்தீன்,
சென்னை.