

‘தி இந்து’வின் ‘வணிக வீதி’ இணைப்பில் இடம்பெற்ற ‘குறள் இனிது’ பகுதியைப் படித்தபோது, திருவள்ளுவரின் நிர்வாக அறிவு பிரமிக்க வைத்தது. மேலாண்மைத் தத்துவத்தை இரண்டு வரிகளில் தெளிவாகச் சொன்ன திருக்குறளை, சிறந்த மேலாண்மை நூலாகவே குறிப்பிடலாம்.
நாம் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியை எப்படி அணுக வேண்டும் என்பதை விளக்கும், ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல இகல்வேந்தரைச் சேர்ந்து ஒழுகுவார்’ - என்ற குறளைப் பணியாளர்கள் பின்பற்றினால், முதலாளிக்கும் பணியாளருக்கும் நல்லுறவு நிச்சயம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.