

தலிபான்களால் சுடப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் உடல்களைப் புதைத்தபோது, விதிமுறைகளையும் மீறி கண்ணீர் விட்டு அழுததாக, பெஷாவர் இடுகாட்டு ஊழியர் தாஜ் முகமது கூறியதைப் படித்ததும் கண்ணீரை அடக்க முடியவில்லை.
தனது பணியில், இறந்த உடல்கள் பலவற்றைக் கண்டிருக்கும் அவர், குழந்தைகளின் உடல்களைக் கண்டபோது அடக்க முடியாமல் கண்ணீர் சிந்தினார் என்றால், அந்தக் குழந்தைகளின் பெற்றோரின் நிலை எப்படி இருக்கும். குழந்தைகளின் உடல்களைப் புதைக்கப் பணமும் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த மனிதத் தன்மையின் வாசனையாவது தலிபான்கள் உணர்ந்திருப்பார்களா?
- புவனகுமாரி,மின்னஞ்சல் வழியாக…