வைகோ x ராஜா: தவறுகளை திருத்தப் பாருங்கள்

வைகோ x ராஜா: தவறுகளை திருத்தப் பாருங்கள்
Updated on
1 min read

பாஜக தேசியச்செயலர் எச்.ராஜா, அரசியல் விமர்சனங்களுக்குப் பயந்தவராகவே தெரிகிறார். கூட்டணியில் இருந்தால் விமர்சிக்கக் கூடாது என்று முடிவுசெய்வது சரியல்ல. ஒரு கூட்டணிக் கட்சியையே மிரட்டும் இவர், எப்படி மக்களின் விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பார் எனும் சந்தேகம் ஏற்படுகிறது.

- ராஜேஷ் மகாலிங்கம்,தி இந்து’ இணையதளத்தில்…

பிரதமர் என்பவர் 122 கோடி இந்தியர்களுக்கும் பொதுவானவர். அவர் விமர்சனங்களுக்கு அப்பாற் பட்டவர் அல்ல. பிரதமர் குறித்து விமர்சனமே செய்யக் கூடாது என்பது, புண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் மூடி வைத்துப் புரையோடிப்போகச் செய்வதற்குக் சமம். ‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ என்ற வள்ளுவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஆரோக்கிய மான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, சுட்டிக்காட்டப்படும் தவறுகளைத் திருத்திக்கொள்ள பாஜக அரசு முன்வர வேண்டும்.

- முகமது ஜின்னா,‘தி இந்து’ இணையதளத்தில்…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in