

இயல்பான எழுத்தில் ஏக்கம்கொள்ள வைத்த இனிமையான கவிதை நடையில் வசீகரமாக அமைந்திருந்தது கிராமஃபோன் பகுதி. வேப்பமுத்துவின் வீரியம் விரிவானவை. அது என்றும் வீணாகாது. விரல் இடுக்கின் சேற்றுப்புண்ணுக்குச் சிறந்த நிவாரணம். தோலின் செழுமைக்கும் உடல் வலிக்கும் உற்ற நண்பன். இறைவன் இலவசமாகவும் விலை குறைவான பொருட்களிலும் மிகப் பெரிய கருணையும் அருளும் அளித்துள்ளான். நாம்தான் நழுவவிடுகிறோம்.
- இக்பால்,மின்னஞ்சல் வழியாக…