

‘போபால் - மறதி எனும் கொடிய நச்சுப்புகை’ தலையங்கம் கண்களில் நீரை வரவழைத்தது. அந்த இரண்டு வயதுக் குழந்தை இன்று இருந்தால் எப்படியிருக்கும் என்ற நினைப்பே வலித்தது. ஒரு பெரிய பேரிழப்புக்குப் பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்பதையும், அந்த நிகழ்விலிருந்து நாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும் தலையங்கம் உணர்த்தியது.
- உஷா முத்துராமன்,திருநகர்.
போபால் பேரழிவின் நிழல் என்றும் மக்கள் மனதிலிருந்து விலகாது. ஆயிரக் கணக்கானோரின் இறப்புக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணத்தைப் பெற்றுத்தர முடியாத அரசியல் தலைவர்களை நினைத்தால் ஆற்றாமை எழுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுத்தர இந்திய அரசு, தலைவர்களுடன் மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும். ஒரு பேரழிவின் சாட்சிகளாக மிச்சம் இருப்பவர்களின் கண்ணீரைத் துடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- சுபா,சேலம்.