

இணைய வர்த்தகத்துக்கென்று ஒரு வரையறை இல்லாதபட்சத்திலும், இந்தியர்களின் கவனம் படிப்படியாக இணைய வர்த்தகத்தின் பக்கம் திரும்புவதைக் காண முடிகிறது. ஒருசில குறைபாடுகள் காணப்பட்டாலும், இதில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. விற்பனைப் பொருட்கள்குறித்த தெளிவான விளக்கம், ஏராளமான ரகங்கள், எல்லாப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தல், தள்ளுபடிச் சலுகைகள், இருந்த இடத்திலிருந்தே பொருட்களை வாங்கும் வசதி, பொருளைப் பெற்றுக்கொண்ட பின் பணம் செலுத்துதல் போன்ற பல வசதிகள் இணைய வர்த்தகத்தில் உள்ளன. இன்று வேர்விட்டிருக்கும் ஆன்லைன் வர்த்தகம் இனி பல்கிப்பெருகும் என்பதில் சந்தேகமில்லை.
- கி. ரெங்கராஜன்,சென்னை.