

தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லும் சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முடிவுசெய்திருப்பது வரவேற்கத் தக்கதுதான்.
வாழ்க்கையில், தோல்வியடைந்தவர்கள், அவமான மடைந்தவர்கள் வேறுவழியின்றி எடுக்கும் கோர முடிவுதான் தற்கொலை. அதில் வெற்றியடையாமல் உயிர் பிழைப்பவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்துக்கு அலையவைப்பதில் நியாயமே இல்லை.
ஆனால், வாழ்வதற்காக எத்தனையோ வழிகள் இருக்கும்போது, அவசரமாக வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயல்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக இது அமைந்துவிடக் கூடாது. எனவே, சட்ட நிபுணர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் என்று அனைத்துத் தரப்பினரும் கலந்து சரியான முடிவை எடுக்க வேண்டும்.
- கண்ணன் பிரபு,மின்னஞ்சல் வழியாக…