

கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பான தீவிர விசாரணையில், சகாயம் ஐ.ஏ.எஸ். இறங்கியிருக்கும் நிலையில், சென்னைத் துறைமுகத்தில் முறையான ஆவணங்களின்றி கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிரானைட் முறைகேடு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபின்னர், கிரானைட் லாரிகளைக் கண்டாலே சந்தேக எண்ணம் எழும் சூழல் உருவாகிவிட்டது. எனவே, விசாரணையின் முதற்கட்டமாக ஊழலைக் கண்டறிந்தபோது எடுக்கப்பட்ட இருப்புக் கற்களை சகாயம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
- கி. ரெங்கராஜன்,
சென்னை.
வரலாற்றை அழிப்பதா?
திருவாதவூர் கிரானைட் குவாரிகளால் வாழ்வின் ஆதாரங்களான நீர்நிலைகளுடன், புராதனச் சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டன என்ற செய்தி பதறவைக்கிறது. ஏற்கெனவே, இளைய தலைமுறையினரிடம் வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம் குறைந்துவருகிறது. பணம் கிடைக்கிறதே என்று நமது புராதனச் சின்னங்களையும் அழித்துவிட்டால் நம்மிடம் என்னதான் எஞ்சி நிற்கும்?
- கா.ந. கல்யாணசுந்தரம்,சென்னை.