

இயக்குநர் கே. பாலசந்தரின் மறைவு, தமிழ்த் திரையுலகுக்கு மாபெரும் இழப்பு. கமல், ரஜினி போன்ற பல முன்னணிக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர்.
இந்தியாவின் முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்தவர் என்று அவரைப் பற்றிய பெருமைகள் ஏராளம்.
தொலைக்காட்சித் தொடர்களின் மூலமும் ரசிகர்களுக்குச் சிறந்த படைப்புகளை பாலசந்தர் தந்தார். ஏராளமான படைப்புகளையும், கலைஞர்களையும் நமக்குப் பரிசளித்துச் சென்றிருக்கும் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி!
- கே. ரவிக்குமார்,மயிலாடுதுறை.