

அரசியல் தலைவர்கள் தங்கள் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றி பல ஆண்டுகளுக்குப் பின்னர், சர்ச்சைக்குரிய வகையில் புத்தகமாக எழுதும் பழக்கம் அதிகரித்துவிட்டது.
நெருக்கடி நிலையின்போது நடந்த விஷயங்களின் அடிப்படையில் புத்தகம் எழுதியிருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.
‘நெருக்கடி நிலை சட்டத்தைக் கொண்டுவருவதற்கான இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் பற்றி இந்திரா காந்திக்குத் தெரியாது’ என்று அவர் எழுதியிருப்பதன் அர்த்தம் என்ன? நெருக்கடி நிலையின் மோசமான விளைவுகளைப் பற்றித் தெரியாமல் அதை அமல்படுத்தினாரா அல்லது அவருக்குத் தெரியாமல் வேறு யாராவது அதைச் செய்தார்களா? எப்படியிருந்தாலும் ஏற்கெனவே தெரிந்த விஷயத்தைப் பற்றி, முற்றிலும் புதிய கோணத்தில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, பிரணாப் முகர்ஜி எழுதியிருக்கிறாரோ என்று சந்தேகம்வருகிறது.
- எம். ராகவன்,மின்னஞ்சல் வழியாக.