

‘கார்காலத்தைப் போற்றுவோம்’ கட்டுரை பல செய்திகளை உள்ளடக்கிய, நினைவில் நிற்கும் பதிவு. கவிதை போன்ற மொழிநடை கட்டுரைக்கு அழகுசேர்த்தது. ஆங்கில வழக்குகளான செயப்பாட்டுத் தொடர்கள் மலிந்த அவியல் தமிழை நாராசமாய்க் கேட்டும் படித்தும் அல்லலுறும் தமிழர்களுக்கு, இந்தக் கட்டுரை சுகானுபவமாக அமைந்திருக்கும்.
பேராசிரியர் கி.நாச்சிமுத்து,
திருவாரூர்.