

ராஜஸ்தானில் 80 வயது மூதாட்டியைச் சூனியக்காரப் பெண் என்று குற்றம்சுமத்தி, நிர்வாணமாக்கி, கழுதை மீது அமர்த்தி ஊர்வலம் நடத்தியிருப்பதாக வெளியான செய்தி, ‘இன்னுமா நம் நாட்டில் இந்தக் கொடுமை நடக்கிறது?’ என்று வேதனைப்பட வைத்தது.
வட இந்தியக் கிராமங்களில் காப் பஞ்சாயத்து என்ற பெயரில், தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்களுக்கு இப்படியான அநாகரிகமான தண்டனைகளை வழங்குகிறார்கள். இத்தனைக்கும் தன்னிடம் இருக்கும் சிறிதளவு நிலத்தை அபகரிக்கத்தான் தன் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டியிருப்பதாக, அந்த மூதாட்டி கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா அரசின் தர்மம்?
- ராஜ்கிருஷ்ணா,திருச்சி.